WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 18, 2015

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நேர்முக தேர்வு அறிவிப்பு

'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, வரும் 25ம் தேதி, நேர்முகத் தேர்வு நடத்தப்படும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், வணிகவியல் - கணினி பிரிவு, வணிகவியல் - சர்வதேச வணிகம் மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு, உதவி பேராசிரியர் பணிக்கு, நேரடி நியமன பணி, 2013ல் துவங்கியது. ஒரு பணியிடத்துக்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், தேர்வானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டு உள்ளது; 43 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்; கணினி தொழில்நுட்பத்துக்கு யாரும் தகுதி பெறவில்லை. 'வரும் 25ம் தேதி, நேர்முகத் தேர்வு நடத்தப்படும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை, டி.ஆர்.பி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.