WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 20, 2015

பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்: விஞ்ஞானி எச்சரிக்கை?

                                          பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்: விஞ்ஞானி எச்சரிக்கை
பூமி பாதிக்கு மேல் அழிந்துவிட்டது என்றும் மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும் என சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவீடனை சேர்ந்த பேராசிரியர் ஜான் ராக்ஸ்ரோம் தனது ஆய்வின் முடிவுகள் பற்றி கூறும்போது ‘‘பூமியின் சமநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும். பூமியின் சம நிலையை பேணுவதற்கு தேவையான 9 காரணிகளில் ஏற்கனவே 4-ஐ நாம் தாண்டி விட்டோம்.

பூமியின் சம நிலைக்கு காரணமான 9 காரணிகளில் காலநிலை மாற்றம், பல்லூயிர் சம நிலை, நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் பயன்பாடு, காடுகளின் அளவை 75 சதவீதமாக வைத்தியிருப்பது ஆகிய நான்கிலும் நாம் எற்கனவே அதிகபட்ச அளவை தாண்டிவிட்டோம். மிதியுள்ளவையான வளி மண்டலத்தில் நுண்துகள் மாசு அதிகரிப்பது, ஓசோன் மண்டல சிதைவு, கடல் அமிலத் தன்மை அதிகரிப்பு, நல்ல தண்ணீர் பயன்பாடு, மனிதன் உருவாக்கும் பொருட்களினால் ஏற்படும் மாசு ஆகியவற்றில் இன்னும் அதன் எல்லையை கடக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உலகின் மக்கள் தொகை 1925-ல் 2 பில்லியனாக இருந்தது. ஆனால் தற்போது அது 7.2 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதேபோல் மனிதர்களுகாக வளர்க்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. அதே சமயம் மற்ற உயிர் இனங்கள் வேகமாக அழிந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் மனிதர்களின் நண்பனாக இருந்த பூமி இப்போது எதிரியாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இப்போதாவது நாம் விரைவாக இந்த பூவுலகை காக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பின்பு ஒருபோதும் காப்பாற்ற முடியாது. இதனால் அதிகமாக பாதிக்கப்படப்போவது மனிதர்களாகிய நாம்தான்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.