பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில்
பிளஸ் 2 பாடங்களைத் துவங்க அரசு பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்த பின், ஜூன் முதல் பாடங்களை துவங்குகிறோம். ஆனால், தனியார் பள்ளிகள், ஜனவரி முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை நடத்துகின்றன.
எனவே, இந்த முறை மே முதல் வாரத்தில் இருந்து, பிளஸ் 1 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை துவங்க திட்டமிட்டுள்ளோம். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர், கோடை விடுமுறையில் பாடம் எடுக்க, தாங்களே முன்வந்துள்ளனர். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள், அதிக கட்டணம் செலுத்தி கோடையில், தனியார் டியூஷன் செல்ல வேண்டிய தேவை இல்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.