WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 29, 2015

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் ரெஸிடென்ட் பணி.

மத்திய அரசின் குடும்பநலம் மற்றும் சுகாதார துறை அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 116
சீனியர் ரெஸிடென்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
No. Admn-I/SR/1(1)/2014
தேதி: 20.03.2015
காலியிடங்கள்: 116
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Anesthesiology - 23
2. Anatomy - 04
3. Biochemistry - 03
4. Blood Transfusion Medicine - 02
5. Dentistry - 02
6. Dermatology - 01
7. E.N.T - 02
8. Forensic Medicine - 02
9. General Medicine - 10
10. General Surgery - 14
11. Geriatric Medicine - 01
13. Microbiology - 01
14. Obst & Gynaec - 10
15. Ophthalmology - 02
16. Orthopedics - 03
17. Pediatrics - 06
18. Pathology - 01
19. Pharmacology - 02
20. Physiology - 04
20. PMR - 01
21. Psychiatry - 02
22. Pulmonary Medicine - 04
23. Radio-Diagnosis - 04
24. Radiotherapy - 01
25. Gastro-Medicine - 05
26. Nuclear Medicine - 06
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் அல்லது பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


வயதுவரம்பு: 17.04.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.


தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்ரு ரூ.250. இதணை Accounts Officer, JIPMER, Puducherry-06 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் ஒவ்வொரு பணிக்கும் நடைபெறும் தனித்தனியாக நடைபெறும் நேர்முகத் தேர்வில் காலை 8.30 மணிக்குள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Hunter Theatre, Ground Floor, Institute Block, JIPMER, Puducherry-06


மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.