WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 8, 2015

பள்ளிகளில் காணாமல் போகும் தொழில்கல்வி பாடப்பிரிவு?

                                        

கோவை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக, 81 பள்ளிகளில் தொழில்கல்வி பாடப்பிரிவு மூடுவிழாவை கண்டுள்ளது. தற்போது, வெறும் 41 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே, தொழில்கல்வி பாடப்பிரிவு அவலநிலையில் செயல்பட்டு வருகின்றது.

மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறையில், 1978ம் ஆண்டு, தொழில் கல்வி பாடப்பிரிவு துவங்கப்பட்டது. மாணவர்களின் தொழில்திறன் மேம்பாட்டுக்கு, பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளில் வர்த்தகம், விவசாயம், பொறியியல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், மின் மோட்டார் பழுது பார்த்தல், கணக்கு தணிக்கை பயிற்சி உள்ளிட்ட 66 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தன.

இப்பிரிவுகளில் படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, நான்கு சதவீதம் பொறியியல் கல்லுாரிகளிலும், 10 சதவீதம் பட்டயப் பிரிவுகளிலும், கலை கல்லுாரிகளில் 25 சதவீதமும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டபோது, அகடமிக் பிரிவுகளை ஒப்பிடும்போது, தொழில்கல்வி பிரிவுகளில், 3:1 என்ற அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருந்தது. தற்போது, 8:1 என்ற அளவுக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, அரசு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என, தொழில்கல்வி ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொழில்கல்வி ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பாமை, 35 ஆண்டுகளாக தொழில்நுட்பத்திற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காததன் காரணமாகவே, தொழில்கல்வி பாடப்பிரிவு முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 122 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 23 அரசு மேல்நிலை மற்றும், 18 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே, தொழில்கல்வி பாடப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மேல்நிலை தொழில்கல்வி ஆசிரியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கோவையில், தற்போது, 36 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களும், ஓய்வுபெறும் நிலையில் உள்ளதால், விரைவில், தொழில்கல்வி பாடப்பிரிவு எந்த பள்ளிகளிலும் இல்லாத சூழல் ஏற்படும். மத்திய அரசு, தொழில்கல்விக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும், மாநில அரசு அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என தோன்றுகிறது "என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.