WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 15, 2015

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கிருஷ்ணகிரி மாணவர் முதலிடம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு
விண்ணப்பித்தோருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவப் படிப்புக்கு வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 31,332 பேர் விண்ணப்பித்துள்ளனர். 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,257 இடங்கள் உள்ளன. 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று 17 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். கிருஷ்ணகிரியைச் சார்ந்த நிஷாந்த் ராஜன் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி, சமயபுரத்தைச் சார்ந்த முகேஷ் கண்ணன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். திருச்செங்கோட்டைச் சார்ந்த பிரவீன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். நிவாஜ் நான்காம் இடம் பிடித்துள்ளார். சரவணகுமார் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார். கவுதம ராஜ் ஆறாம் இடத்தையும், மோது ஸ்ரீ ஏழாம் இடத்தையும் பிடித்துள்ளனர். திராவிடன் எட்டாம் இடத்தையும், பிரவீன்குமார் ஒன்பதாவது இடத்தையும், முகமது 10-ம் இடம் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.