சென்னையில் உள்ள, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சீர்மிகு சட்டப்
பள்ளியில், போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவுஉயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அசோக் சக்ரவர்த்தி தாக்கல் செய்த மனு:சென்னை தரமணியில், சீர்மிகுசட்டப் பள்ளிக்கு, கட்டடம்கட்டப்பட்டு வருகிறது. அங்கு, கட்டுமானப் பணிகள் முடிந்து, உள்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்பட்ட பின் தான், அந்த இடத்துக்கு, சட்டப் பள்ளியை மாற்ற வேண்டும். மேலும், போதிய ஆசிரியர்களை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கும், சீர்மிகு சட்டப் பள்ளிக்கும் நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, முதல் பெஞ்ச் விசாரித்தது. பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்டப் பல்கலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறைவு மற்றும் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லுாரியின் அலுவலகம், சென்னையில் இயங்குவது தொடர்பாக, பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு, அரசு தரப்பில் பதிலளிக்க, அரசு பிளீடர் மூர்த்தி, சட்டப் பல்கலை பிரதிநிதிகள் நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர். பார் கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. தள்ளிவைப்புசென்னை பாரிமுனையில் இயங்கும், திருப்பதி அம்பேத்கர் சட்டக் கல்லுாரியின் அலுவலகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால், அங்கு, திடீர் ஆய்வை, பார் கவுன்சில் மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கிறோம். வரும், 28ம் தேதிக்கு, விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.