இந்திய அரசின் முன்னணி பொது காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா
இன்சூரன்ஸ் கம்பெனியில் அசிஸ்டென்ட் பணியில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 750 பணி: Assistant வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.7,640 - 21,050 மற்றும் இதர சலுகைகள். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 60 சதவிகித மதிப்பெண்கலுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மாநில மொழியில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: என்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, கணினி திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, கும்பகோணம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், புதுச்சோரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி. விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்தினாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் ஆகியோருக்கு ரூ.75. இதனை Debit cards, Credit Cards, internet Banking, IMPS, Cash Cards, Mobile Mallets ஆகிய ஏதாவதொரு முறையில் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.uiic.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 20.07.2015 ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 30.08.2015 தேர்வு தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.uiic.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.