WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 13, 2015

தமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, தேசிய அளவிலும், மாநில அளவிலும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.கல்விப்பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியரை தேர்வு செய்து, மத்திய, மாநில அரசுகள், விருது மற்றும் ரொக்கப்பரிசை வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி, 2014ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தமிழகத்தில் இருந்து, 22 ஆசிரியர்களை தேர்வு செய்துஉள்ளது. டில்லியில் விழா நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, வரும் செப்., 5ம் தேதி, டில்லி, ராஷ்டிரபதிபவனில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, விருதை வழங்க உள்ளார். கடந்த ஆண்டு வரை, பரிசுத்தொகை, 25 ஆயிரம் ரூபாயாக இருந்தது; இந்த ஆண்டு முதல், 50 ஆயிரமாக வழங்கப்பட உள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு, கடிதங்களை அனுப்பி வருகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.