WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 13, 2015

சுதந்திர தின விழாவில், ஆசிரியர்கள், மரக்கன்றுகளை நட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'சுதந்திர தின விழாவில், ஆசிரியர்கள், மரக்கன்றுகளை நட வேண்டும்' என,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.'குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று, பள்ளிகளில், கண்டிப்பாக தேசியக் கொடியேற்ற வேண்டும் என்ற உத்தரவை, சில பள்ளிகள் கடைபிடிப்பதில்லை' என, கல்வித்துறைக்கு புகார் சென்றது.நடப்பாண்டில், இந்த தவறு நடக்கக்கூடாது என்றும், சுதந்திர தின விழா நாளன்று, பள்ளிகளில், ஆசிரியர்கள், மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், ''கல்வித்துறையின் விரிவான சுற்றறிக்கை குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.