WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 16, 2015

ஆண்டுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் அறிவித்தும் ஆசிரியர் பணிக்கு ஆள் இல்லாமல் தவிக்கும் பள்ளி.

இங்கிலாந்து அருகே உள்ள "தீபகற்ப" கிராமத்தில் ஐந்தே மாணவர்கள் உள்ள
பள்ளியில் பணியாற்ற ஆண்டுக்கு ரூ. 35 லட்சம் சம்பளம் கொடுப்பதாகக் கூறியும் ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம்.40 குடுமபங்கள் வசித்து வரும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் தீபகற்ப கிராமத்தில் மருத்துவமனை, தபால் நிலையம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் தபால்காரர் வருவாராம். இங்குள்ள மக்கள் இப்பகுதியிலேயே தங்களுக்குத் தேவையானதை உருவாக்கிக் கொள்வதால் அவர்களும் அதிக அளவில் வெளியில் செல்வதில்லையாம்.

ஒரு பள்ளி..
5 மாணவர்கள் இங்கு ஒரு பள்ளியும் உள்ளது. அதில் ஐந்து மாணவர்கள் உள்ளனர். ஆனால், இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்தான் இல்லை. தற்போது இந்தப் பள்ளியின் மாணவர்களுக்கு, அவ்வப்போது வெளியில் இருந்து வந்து மாணவர்களே வகுப்பெடுக்கின்றனர். எனவே இந்த ஆசிரியர் பணிக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு முப்பத்தந்து ஆயிரம் பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் 35 லட்ச ரூபாய்) என இரண்டு முறை ஆசிரியர் தேவை விளம்பரம் அளித்தும் யாரும் விண்ணப்பிக்க முன்வரவில்லை. எளிதில் வந்து போக முடியாத அளவிலான தொலை தூர கிராமம் என்பதால் யாரும் வேலைக்கு வரத் தயங்குகிறார்களாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.