WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 16, 2015

பிளஸ்-2 துணைத் தேர்வு: அனுமதிச் சீட்டை செப்.18 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வருகிற 18-
ஆம் தேதி முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்தது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பித்தவர்களில், பிளஸ்-2 செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்றவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்பதோடு, செய்முறைத் தேர்வையும் மீண்டும் செய்ய வேண்டும். இதுபோல, முதல்முறையாக பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள் (ஹெச்.பி. வகை) பகுதி 1, பகுதி 2 மொழிப் பாடத்தின் இரண்டு தாள்களையும், பகுதி 3-இல் சிறப்பு மொழியை (தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். கேட்டல், பேசுதல் திறன் தேர்வுக்கான தேதியை சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.