புதுடில்லி: பொது நுழைவுத் தேர்வு மூலம், மருத்துவக் கல்லுாரிகளில்
மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தற்போது, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை, பல்வேறு அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. சில மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகள் சார்பில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தனியார் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் ஆகியவை, தனியாக நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
2009ல், கேதன் தேசாய், எம்.சி.ஐ., தலைவராக இருந்தபோது, இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோர்ட் தலையிட்டதால், இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. பொது நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து, எம்.சி.ஐ., பொதுக் குழு கூட்டத்தில், சமீபத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வை நடத்த, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, எம்.சி.ஐ., தரப்பில், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்து, பொது நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்த முடிவை, விரைவில் அறிவிக்கவுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.