அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், கல்வித்தர மேம்பாட்டு ஊதியம், நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், 7,000 பேராசிரியர்
அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும், 140 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உள்ளன; இவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, சம்பளம் தவிர்த்து, கல்வித்தர ஊதியம் கூடுதலாக வழங்கப்படுகிறது.இவ்வாறு, பேராசிரியர்களுக்கு, மாதம், 6,000 ரூபாய் வழங்கப்படும்.
இவர்கள், பி.எச்டி., முடித்தால், மூன்று ஆண்டுக்கு பின், எம்.பில்., முடித்தால், நான்கு ஆண்டுக்கு பின், மற்றவர்களுக்கு, ஐந்து ஆண்டுக்கு பின், தர மேம்பாட்டு ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 2007ல், அரசு கல்லுாரிகளில், 4,000 பேர், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 3,000 பேர்
பேராசிரியராக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 2011 முதல், மாதம் தோறும், 7,000 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 6,000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது.
கடந்த ஏப்ரலில், நிலுவை தொகையை வழங்க, உயர் கல்வித்துறை அரசாணை பிறப்பித்தது. ஆனால், அமலுக்கு வரவில்லை. அரசு கல்லுாரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் சிவராமன், ''4 ஆண்டுகளாக ஊதியம் பாக்கி உள்ளதால், பேராசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்,'' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.