WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 26, 2015

மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பு: மாநில அரசுகளுக்கு தடை: யூ.ஜி.சி., பார்த்து கொள்ளும் :மத்திய அரசு.

'நிகர் நிலை பல்கலை மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பை, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டாம்; பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., பார்த்து
கொள்ளும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.வெளிநாடுகளில் படிக்க செல்லும் அல்லது பணிக்கு செல்லும் மாணவர் சான்றிதழ்களை, சரிபார்க்கும் பணி, மாநில அரசுகளின் அயல்நாடு விவகாரத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.இதில், 'நிகர் நிலை பல்கலைகளின் சான்றிதழ், மாநில அரசுகளால் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை. சான்றிதழின் உண்மை தன்மை குறித்த அறிக்கை, தாமதமாக கிடைக்கிறது' என, புகார் எழுந்துள்ளது. இதனால், பல நேரங்களில், போலி சான்றிதழ் வருவதாக வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன.இந்த பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மனித வள மேம்பாட்டு துறையின், உயர் கல்வி மற்றும் இடை நிலை கல்வி பிரிவு தலைமை செயலர், சி.எஸ்.ராஜன் பிறப்பித்த உத்தரவு:நிகர் நிலை பல்கலைகள், யூ.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. அவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதே நேரம், மாணவர் சான்றிதழ் ஆய்வு செய்யப்படும் போது, சம்பந்தப்பட்ட பல்கலை மற்றும் பாடப்பிரிவை, யூ.ஜி.சி., அங்கீகரித்ததா என்பதை அறிய, மாநில அரசுகள் தடுமாறுகின்றன; பல்கலைகளும் சரியான ஆவணங்களை மாநில அரசுகளிடம் அளிப்பதில்லை எனவே, நிகர் நிலை பல்கலை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டாம்; அவற்றை, யூ.ஜி.சி.,யே கவனித்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.