WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 24, 2015

இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணி.

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள மத ஆசிரியர் (Religious Teacher) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியான இந்திய ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Religious Teacher (Junior Commissioned Officer)

காலியிடங்கள்: 85

துறை வாரியான காலியிடங்கள் விவரம்:

1. பண்டிட் - 74

2. கிராந்தி - 04

3. பாதிரி - 02

4. பண்டிட் (கூர்க்கா) - 01

5. மவுலவி (ஷியா) - 01

6. புத்தபிட்சு (மகாயானம்) - 03

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 வழங்கப்படும்.

வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி 27 - 34க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விவரங்களுக்கு இணையதலத்தை பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.02.2016.

எழுத்துத் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் தேதி: 04.05.2016.

மேலும் விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.