WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 24, 2015

பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அறிவுரை.

கல்லுாரிகளில், தர மதிப்பீட்டு முறையை பின்பற்ற, பல்கலைக்கழக மானியக்
குழு - யு.ஜி.சி., அறிவுறுத்து உள்ளது.தேர்வில், மதிப்பெண் மற்றும், 'ரேங்க்' வழங்கப்படுவதற்கு பதில், கிரெடிட் எனப்படும் தர மதிப்பீட்டு எண் வழங்கப்படும் முறை, சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டது; எனினும், தமிழகம் உட்பட பல மாநிலங்களில், இன்னமும் முழுமையாக அமல்படுத்தவில்லை. இந்நிலையில், யு.ஜி.சி., தலைவர் வேத் பிரகாஷ், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய கடிதம்:விருப்ப பாடம் மற்றும் தர மதிப்பீட்டு கிரெடிட் முறையை அறிமுகம் செய்தால், மாணவர்களுக்கு பயன்கள் கிடைக்கும். அவர்களால் எளிதாக, விரும்பிய பாடங்களை படிக்கவும், விரும்பிய கல்வி நிறுவனங்களில் சேரவும் வழி ஏற்படும்.இன்னும், 30 சதவீத பல்கலைகளில், கிரெடிட் முறை அறிமுகம் செய்யவில்லை. எனவே, வரும் கல்வியாண்டு முதல், அனைத்து அரசு பல்கலை, நிகர் நிலை மற்றும் சுய நிதி பல்கலைகளில், கிரெடிட் முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.