தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கழகம் (என்சிஇஆர்டி) சார்பில் சமீபத்தில் நாடு முழுவதிலும் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஆய்வு
நடத்தப்பட்டது.
33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 7216 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 2.77 லட்சம் மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 41% மாணவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் சரியாக பதிலளித்துள்ளனர். கணிதத்தில் 40% மாணவர்களும், அறிவியலில் 43% மாணவர்களும், சமூக அறிவியலில் 47% மாணவர்களும், இந்திய மொழிகளில் 53% மாணவர்கள் மட்டுமே சரியான பதில் அளித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் 500ல் 277 மாணவர்களும், அரசு பள்ளிகளில் 236 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 246 மாணவர்கள் மட்டுமே சிறந்தவர்களாக உள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.