WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 7, 2016

போலி சான்றிதழ் விவகாரம்; விடுமுறையில் சென்ற ஆசிரியர்கள்.


போலி சான்றிதழ் தொடர்பான விசாரணை, தீவிரம் அடைந்து வரும் நிலையில், திடீர் என விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போலி ஜாதி மற்றும் கல்வி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாராதியார் நகரைச் சேர்ந்த முனியப்பன், 37, கிருஷ்ணகிரி மாவட்டம் கூச்சானூரைச் சேர்ந்த செந்தில்குமார், 38, இவர்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்த கிருஷ்ணகிரி திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், 42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்தில், ராஜேந்திரன் மூலம், பலர் போலி ஜாதி, கல்வி சான்றிதழ் பெற்று, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து, இந்த மாவட்டங்களில் திடீர் என விடுமுறை எடுத்த, 40 ஆசிரியர்கள் குறித்த, விபரங்களை கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து போலீசார் பெற்றுள்ளனர். அவர்களின் விடுமுறைக்கான காரணம் மற்றும் சான்றிதழின் உண்மை தன்மை குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும், முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் குறித்த விபரங்களையும் அளிக்க, கல்வித்துறையினருக்கு, போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். கல்வித்துறையினர் எடுத்த கணக்கெடுப்பில், முன் அறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்தவர்களின் எண்ணிக்கை, 100க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த விபரங்களை பெற்றுள்ள போலீசார், அவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். போலி சான்றிதழ் பெற்று, பல்வேறு மாவட்டங்களில் பலர் ஆசிரியர் பணி பெற்றுள்ளதால், இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.