WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 19, 2016

பிஎஸ்எல்வி-சி31 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ்-1இ செயற்கைக் கோள் விண்ணில் புதன்கிழமை பாய்கிறது


கடல் ஆய்வுக்கான ‘ஐஆர்என்எஸ்எஸ்-1இ’ செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி-சி31 ராக்கெட் மூலம் ஜனவரி 20-ல் (புதன்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐஆர்என்எஸ்எஸ் வகையை சேர்ந்த 7 செயற்கைக்
கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவதாக, ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைக் கோள் 2013 ஜூலையிலும், 1பி 2014 ஏப்ரலிலும், 1சி 2014 அக்டோபரிலும், 1டி 2015 மார்ச்சிலும் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த வரிசையில் 5-வதாக ஐஆர்என்எஸ்எஸ்-1இ செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி31 ராக்கெட் மூலம் ஜனவரி 20-ம் தேதி காலை 9.31 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்காக ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கியது. 1,425 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோள் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கி.மீ. தூரத்திலும், அதிகபட்சம் 20,657 கி.மீ. தூரத்திலும் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதன்மூலம் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.