WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 12, 2016

710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்- தரம் 3 (லேப் டெக்னீசியன் கிரேட்- 3)
பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்தப் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஓராண்டு மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 1-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ்-2, ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண்களின்படி தகுதிகாண் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, தேர்வு செய்யப்படுவர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.