WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 12, 2016

பள்ளிகளில் ஆண்டுவிழா; அனைவருக்கும் கல்வியில் நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில், சென்னையை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, பள்ளி ஆண்டு விழாவும், அதில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளும் முக்கிய பங்கு வகிக்கும். அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பெரும்பாலானவற்றில், நிதி பிரச்சனை காரணமாக ஆண்டு விழா நடத்துவதில்லை. இந்நிலையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 மாணவர்களுக்கு மேல் உள்ள துவக்கப்பள்ளிகளுக்கு, 5,000 ரூபாயும், 150 மாணவர்களுக்கு மேல் உள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு, 6,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளும், கட்டாயக்கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் இடம் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இந்த உத்தரவிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.