மத்திய அரசின் சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, தரம் மதிப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இதையொட்டி,
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., சார்பில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது.இந்த அமைப்புக்கு, கல்லுாரி மற்றும் பல்கலைகள், தங்களின் ஐந்தாண்டு செயல்பாடு குறித்த அறிக்கையை அனுப்ப, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டது; ஆனால், சில நிறுவனங்கள் மட்டுமே, அறிக்கை அனுப்பின.இதையடுத்து, கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகள், தங்களின் செயல்பாடு குறித்த அறிக்கையை, தேசிய தர மதிப்பீட்டு நிறுவனமான, என்.ஐ.ஆர்.எப்.,க்கு, வரும், 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.