போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்த விவகாரத்தில்,மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி சான்றிதழ் பெற்ற ஆசிரியர் மாயமாகி வருகின்றனர். போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்களின் விவரங்களை அறிய, 5 மாவட்ட சி.இ.ஓ.,க்களின் உதவி போலீசார் நாடியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முனியப்பன், 37. இவர், போலி கல்வி மற்றும் ஜாதி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தது தொடர்பாக, கடந்த, 2ம் தேதி கைது செய்யப்பட்டார். முனியப்பனுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த, கிருஷ்ணகிரி திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், 42 என்பவரும், போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணிக்கு சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கூச்சானூரைச் சேர்ந்த செந்தில்குமார், 38 என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ராஜேந்திரன் மூலம் பலர் போலி ஜாதி, கல்வி சான்றிதழ் பெற்று, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில், திடீர் விடுமுறை எடுத்துள்ளவர்கள் விவரங்களை, தனிப்படை போலீசார் அந்த மாவட்டங்களின் சி.இ.ஓ.,விடம் கேட்டுள்ளனர். இந்த விவரம் வந்ததுடன், விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள் குறித்து விசாரிக்க, தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூவரையும் மீண்டும் கஸ்டடி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், போலி சான்றிதழ் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முனியப்பன், ராஜேந்திரன், செந்தில்குமார் ஆகிய, மூவரும், நேற்று இரவு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.