கல்லுாரி அலுவலர்களுக்கு பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) வரையறைப்படி சம்பளம் வழங்க வேண்டும்,' என தமிழ்நாடு தனியார் கல்லுாரி அலுவலர்கள் சங்க (டான்சாக்) மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மதுரை
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்த மாநாட்டிற்கு, தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார்.இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய திட்டத்தை கைவிட மறுக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக சட்டசபை தேர்தலில் ஆசிரியர்கள், அலுவலர்கள் நிலைப்பாடு இருக்க வேண்டும்.கல்லுாரி அலுவலர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஆறாவது சம்பள குழுவில் 10 ஆண்டுகளாக நீடிக்கும் முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும்.தனியார் கல்லுாரி அலுவலர்களுக்கு யு.ஜி.சி.,-ஏ.ஐ.சி.டி.இ., வரையறைப்படி சம்பளம் நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.