பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4ல் பிளஸ் 2 வுக்கும், மார்ச், 15ல், 10ம் வகுப்புக்கும் தேர்வு துவங்க உள்ளது.
வெள்ளம் பாதித்த, நான்கு மாவட்டங்களுக்காக, தமிழகம் முழுவதும்
அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. ஜன., 11ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வு துவங்கி, 27ல் முடிகிறது. இதையடுத்து, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். அதற்கு கணினி அறிவியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் மாணவர்களுக்கு, 10 நாட்கள்
தேவைப்படும். பின், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மூன்று திருப்புதல் - ரிவிஷன் - தேர்வுகள் நடத்த வேண்டும்.
எனவே, பொதுத் தேர்வை, 10 நாள் தள்ளிவைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அரசு தேர்வுத் துறை, வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வு துவங்கும் படி செய்துள்ளது.இந்நிலையில், இந்த மாதம் முழுவதும், அரையாண்டு தேர்வு நடக்கும் நிலையில், செய்முறை தேர்வு எப்போது என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, பிப்ரவரி 5 - 25க்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்முறை தேர்வு எப்போது என, தாமதமின்றி அறிவித்தால் மட்டுமே, அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த முடியும். பிப்ரவரி முதல் வாரத்திலேயே செய்முறை தேர்வை நடத்தி முடித்தால் தான், அடுத்தடுத்து, திருப்புதல் தேர்வுகள் நடத்தி, பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும்.
பேட்ரிக் ரைமண்ட்,
பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.