பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ல் ஆரம்பித்து ஏப்ரல்11-ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப் பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத் தில் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன. எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையும் நிலையில்தான் உள்ளது. பொதுவாக பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் முடிந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்றுக் கொண்டிருக் கும்போதே தேர்வு முடிவுகள் தொடர்பான செய்திகள் ஊடகங் களில் வெளியாவது வழக்கம். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தொடர்பான யூகங்களால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்துக்கு உள்ளாவதை தடுக்கும் வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விவரங்களை அரசு தேர்வுத்துறை அதிகாரபூர்வமாக முன்கூட்டியே வெளியிடும் நடைமுறையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதே நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் முடிவுகள் எப்போது என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத் துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே, பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண்களை தொகுக்கும் பணி நடைபெற்று வரும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
Showing posts with label exam news. Show all posts
Showing posts with label exam news. Show all posts
Wednesday, April 27, 2016
Monday, March 21, 2016
பிளஸ் 2 தேர்வில் 'போனஸ்' மதிப்பெண் தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை.
பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளில், மதிப்பெண் வழங்குவதில் சலுகை அளிக்க வேண்டும்' என, தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் தேர்வு, மாணவர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. கடந்த, 10 ஆண்டுகளில்
Tuesday, March 15, 2016
பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்:மாணவர்கள் திணறல்.
நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது என்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு
Wednesday, March 9, 2016
10ம் வகுப்பு முகப்பு தாளில் பிழை:திருத்தம் செய்ய வழிமுறை வெளியீடு.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில், தைக்கப்பட்டுள்ள முகப்பு சீட்டில், ஒரு சில மாணவர்களின் விவரங்களில் பிழை இருந்ததால், தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், அவற்றை
8ம் வகுப்பு தேர்வு 'தத்கல்' விண்ணப்ப தேதி அறிவிப்பு.
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், மார்ச், 11, 12ல் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மார்ச் 14ல் துவக்கம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து
Sunday, March 6, 2016
பொதுத்தேர்வு மாணவர்களை கலங்கடிக்காதீங்க!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில்,
Saturday, March 5, 2016
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது சொன்னதை செய்தது தேர்வு துறை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, பாடங்களின் உள் பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன. நேற்று
Thursday, March 3, 2016
ஆசிரியர்கள் அதிர்ச்சி விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரி திடீர் மாற்றம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்க, ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கடலுார் மாவட்ட விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரி, திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதனால், பொதுத் தேர்வு துவங்கும் முன்னரே, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் எந்த பள்ளி மாநில, 'ரேங்க்' எடுப்பது; எந்த பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெறுவது என, கடும் போட்டி உண்டு. இதற்காக, தேர்வு பணிக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களில், தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க, ஆசிரியர் சங்கங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் பல வகை சிபாரிசுகள் தேர்வுத் துறைக்கு வருவது உண்டு. இந்த ஆண்டு தேர்வு பணிகளில் குளறுபடி, பொதுத் தேர்வு துவங்கும் முன், துவங்கி விட்டது.
கடலுார் மாவட்டம், சி.என்.பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், மாவட்ட விடைத்தாள் திருத்தும் முகாமின் உதவி அலுவலராக பணி அமர்த்தப்பட்டார். இதற்காக, சென்னையில் நடந்த விடைத்தாள் திருத்தும் பணி பயிற்சியிலும் அவர் பங்கேற்றார்.ஆனால், திடீரென அவரது நியமனத்தை, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது. அந்த இடத்தில் வேறு ஆசிரியரை, சிபாரிசின் பேரில் நியமிக்க, அதிகாரிகள் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பிரச்னைக்குரிய கடலுார் பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலுார் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்குளறுபடிகள் நடக்கும். குறிப்பிட்ட, ஒரு அரசு பள்ளி தேர்வு மையத்தில், மாணவர்கள் காப்பியடிக்க, அங்கு தேர்வுப் பணிக்கு வரும் ஆசிரியர்களே உதவுவதாக, பல முறை புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், ஆசிரியர் ஒருவரின் மகன், காப்பியடித்து பிடிபட்டார். இது குறித்து, தற்போதைய தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி விசாரணை நடத்தினார்என்பது குறிப்பிடத்தக்கது.
அழுத்தம் தருகின்றனர்:அரசியல் செல்வாக்குள்ள சிலர், குறிப்பிட்ட தேர்வுத்தாள் திருத்தும் மையப் பணியை கேட்டுள்ளனர். மேலிட பெயரைச் சொல்லி, சிலரை தேர்வு மையம் மற்றும் விடைத்தாள் திருத்தும் இடங்களுக்கு பணியில் அமர்த்த அழுத்தம் அளித்து வருகின்றனர்.
தேர்வுத்துறை வட்டாரங்கள்
சந்தேகம் தருகிறது:தேர்வு பணிகளில், பாரபட்சமின்றி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்தின் முக்கிய பணியில் ஆசிரியர் ஒருவரை நியமித்து, பயிற்சியும் அளித்த பின், திடீரென அவரை நீக்கம் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதிகாரிகள் எந்த சிபாரிசையும் ஏற்காமல், சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு தேர்வு பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை அறிவிக்க வேண்டும். சாமி சத்தியமூர்த்தி, தலைவர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் சங்கம்
பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் 9.25 லட்சம் மாணவர் பங்கேற்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 9.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்கி, ஏப்., 1ல் முடிகிறது. 5,600 பள்ளிகளை சேர்ந்த, 9.25 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்; இதற்காக, 2,425 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்க, 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணிகளில், 50 ஆயிரம் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். சென்னையில், 150 தேர்வு மையங்களில், 60 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
'லீக்' தடுக்க தீவிரம்:கடந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது, கணிதத் தேர்வு வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்'பில், 'லீக்' ஆனது. இந்த ஆண்டு, அது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, தேர்வுத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வினாத்தாள் வெளியான, ஓசூர் கல்வி மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த
முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு தேர்வில், கணிதம், பொருளியல், வேதியியல், வேளாண் செய்முறை போன்ற வினாத்தாள்களில் பிழைகள் இருந்தன. பொருளியல் வினாத்தாள் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தேர்வர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, 'போனஸ்' மதிப்பெண் பெறப்பட்டது. இந்த ஆண்டு அதே போன்ற பிரச்னை வரக்கூடாது என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
துறையின் குழப்பம்:ஒவ்வொரு ஆண்டும், தேர்வுக்கு, ஒரு வாரம் முன், தேர்வு எழுதும் மாணவர்களின் சரியான எண்ணிக்கை முடிவு செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு பல்வேறு தொழில்நுட்ப கோளாறால், தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பை, தேர்வுத்துறை வெளியிடவில்லை.
இது குறித்து விசாரித்த போது, 'அனுமதியில்லாத வகுப்பு மாணவர்கள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு சலுகை வழங்குதல்; 'யூனிக் ஐ.டி.,' என்ற தனி எண் தயாரித்தல்; தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குதல்; மாணவ, மாணவியரின் பெயர், விவரங்களில் பிழை திருத்துதல் போன்ற காரணங்களால், நேற்று வரை சரியான மாணவர் எண்ணிக்கையை முடிவு செய்ய இயலவில்லை' என, அலுவலர்கள் கூறினர்.
Wednesday, March 2, 2016
பொதுத்தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 155 பறக்கும்படைகள்.
பொதுத்தேர்வில் மாணவர்களை கண்காணிக்க 155 பறக்கும் படைகளை அமைக்க, திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்
Monday, February 29, 2016
பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி.
பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், பெற்றோர் மற்றும்
Wednesday, February 24, 2016
'விடையை அடித்தால் ரிசல்ட் நிறுத்தம்'.
'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும்
Tuesday, February 23, 2016
Friday, February 19, 2016
விடைத்தாளில் விளையாடினால் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு விடைத்தாளில் விளையாடினால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என, மாணவர்களை தேர்வுத்துறை
Wednesday, February 17, 2016
பிளஸ் 2 தேர்வுஇருவித விடைத்தாள் வழங்க திட்டம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், கோடிட்டவை, கோடிடப்படாதவை என, இருவிதமான விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து பாடங்களுக்கும், நான்கு
Friday, February 5, 2016
பாடங்கள் முடிக்கவில்லை: தேர்வு தேதிகள் அறிவிப்பு.
மூன்றாம் பருவத்திற்கான பாடங்களை கற்பிக்க போதிய அவகாசம் இன்மையால், அவசரகதியில் பாடங்களை எடுக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மூன்றாம் பருவத்தேர்வுகளுக்கான
Wednesday, February 3, 2016
போலி சான்றிதழ்கள் தடுக்க ’ஸ்மார்ட்’ எண்!
போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, ஸ்மார்ட்
6 - 11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்பு.
தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வுகுப்புகளுக்கு, ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்., 21ல், அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன.
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி
Friday, January 15, 2016
எட்டாம் வகுப்புதேர்வு தள்ளிவைப்பு.
தமிழகத்தில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 வரை படிக்க, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த
Subscribe to:
Posts (Atom)