WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 26, 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு எழுவது குறித்து சில விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கை,
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

• பிளஸ் 2 தேர்வு காலை, 9:45 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு முடியும்
• முதல் மணி, 9:45 மணிக்கு அடிக்கும். கண்காணிப்பாளர்கள், ஹால் டிக்கெட்டை சரிபார்த்து, தேர்வர்களை அறைக்குள் அனுப்ப வேண்டும்.
• பின் 9:50 மணிக்கு, தேர்வு விதிமுறைகள் குறித்து, அறை கண்காணிப்பாளர் விளக்குவார்
• இரண்டாவது மணி, 9:55 மணிக்கு அடிக்கப்பட்டதும், சீலிட்ட வினாத்தாள் உறை மாணவர்களிடம் காட்டப்படும். இரண்டு மாணவர்களிடம் கையெழுத்து பெற்ற பின், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும் மூன்றாவது மணி, 10:00 மணிக்கு ஒலித்ததும், வினாத்தாள் தரப்படும்
• நான்காவது மணி, 10:10 மணிக்கு ஒலித்ததும், முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும். மாணவர்கள் முகப்பு சீட்டில் உள்ள தங்கள் புகைப்படம், பெயர், விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட வேண்டும்
• ஐந்தாவது மணி, 10:15 மணிக்கு அடித்ததும், தேர்வர்கள் தேர்வு எழுத துவங்கலாம்
• முதலாவது மணி, ஒரு முறை; இரண்டாவது மணி, இரண்டு முறை என்ற வரிசையில், ஐந்தாவது மணி, ஐந்து முறை அடிக்கப்படும்.
• ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும், ஒரு முறை மணி அடிக்கப்பட்டு, மாணவர்கள் எச்சரிக்கை செய்யப்படுவர்.
• இறுதியாக, 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும். 1:15 மணிக்கு தேர்வு முடியும். இதை மாணவர்கள் அனைவரின் கவனத்துக்கு கொண்டு செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.