தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களில் பணியாற்ற, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
பணி: தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்கள்: 500
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற பொறியியல் துறை பிரிவில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: தொழில்நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல்)
காலியிடங்கள்: 25
கல்வித்தகுதி: டிப்ளமோ படிப்பில் மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி வரைவாளர்
காலியிடங்கள்: 50
கல்வித்தகுதி: கைவினைஞர் சான்று வரைவாளர் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பணி: களப்பணி உதவியாளர் (பயிற்சி)
காலியிடங்கள்: 900
கல்வித்தகுதி: மின்னியல், கம்பியாளர் பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
பணி: டெஸ்டர் கெமிக்கல்
காலியிடங்கள்: 100
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை உதவியாளர் (நிர்வாகம்)
காலியிடங்கள்: 100
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை உதவியாளர் (கணக்கு)
காலியிடங்கள்: 250
தகுதி: வணிகவியல் பிரிவில் பி.காம்., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை தணிக்கையாளர்
காலியிடங்கள்: 25
தகுதி: இளநிலை பிரிவில் பி.ஏ., பி,எஸ்சி., பி.காம்., போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர்
காலியிடங்கள்: 25
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை: அனைத்து பணியிடங்களுக்கும், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நாள்: ஏப்ரல் 3
விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.directrecruitment.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 16
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.