பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளை தீவிரமாக கண்காணிக்க அண்ணா பல் கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4-ம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு நடந் தது. ஆங்கிலம் முதல்தாள் போல, 2-ம் தாள் தேர்வும் எளிதாக இருந்த தாக பல மாணவ, மாணவிகள் கூறினர்.
இந்நிலையில், மருத்துவம், பொறியியல், விவசாயம், கால் நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு சேர கணக்கில் கொள்ளப்படும் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் 14-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கு கின்றன. பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்ணும், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்பு களுக்கு உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்ணும் பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு பிளஸ் 2 முக்கிய தேர்வுகளை கண்காணிக்க அண்ணா பல்கலைக்கழக பேராசிரி யர்கள் 33 பேர் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மட்டும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். யார் யார் எந்தெந்த மாவட்டத்துக்கு செல்கின்றனர் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்படும் என்று அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.