WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 26, 2016

தேர்தல் பணி பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு 150 ரூபாய் கூலி தேர்தல் கமிஷன் உத்தரவு.

தேர்தல் பணி பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு மதிய உணவுக்கு ரூ. 150 வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது .தமிழக
சட்டப்பேரவைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் 1.98 லட்சம் பெண்கள் உட்பட 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இதற்காக தொகுதி வாரியாக மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு மதிய உணவு வழங்க ஒருவருக்கு ரூ. 150 ஒதுக்கப்படுகிறது. ஆனால் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யும் அதிகாரிகள், அந்த தொகையை சரியாக வழங்குவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு அவர்கள் கையில் 150 ரூபாயை வழங்கி விடுங்கள். பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில்,ஏதேனும் ஓட்டல் நிறுவனத்தை ஸ்டால் அமைக்க சொல்லுங்கள். பயிற்சிக்கு வருவோர் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடட்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.