மத்திய அரசில் மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர் பணி மத்திய அரசு நிறுவனமான ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பார்மசிஸ்ட் மற்றும் ஆய்வக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.2/2016 பணி:
Pharmacist காலியிடங்கள்: 02 தகுதி: Pharmacy, Ayurveda பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆயுர்வேத பிரிவில் பி.பார்ம் முடித்திருக்க வேண்டும். பணி: Laboratory Technician காலியிடங்கள்: 02 தகுதி: அறிவியல் பிரிவில் +2 தேர்ச்சி பெற்று Medical Laboratory Technology பிரிவில் 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணி: Laboratory Attendant காலியிடங்கள்: 01 தகுதி: அறிவியல் பிரிவில் +2 தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.ccras.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Officer-in-Charge, ARRI, Gandhi Bhavan, Mandi, Himachal Pradesh-175001 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.05.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccras.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.