சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பல்கலையின்
தொலைநிலை கல்வியில், இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, டிசம்பர் மாத தேர்வுகள், கன மழையால் தள்ளி வைக்கப்பட்டு, ஜனவரியில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் மார்ச்சில் வெளியானது. இந்த முடிவுகளில் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மீண்டும், விடைத்
தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய மதிப்பெண் பட்டியல், நேற்று வெளியானது. 'பல்கலையின் https://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்ணை அறியலாம்' என, பல்கலை தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.