பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு, 'சென்டம்' வழங்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 10ம் வகுப்பு
பொதுத்தேர்வு, ஏப்., 13ல் முடிந்தது; 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும், 40க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இந்த ஆண்டு முதல், விடைத்தாள் திருத்தத்தில் மொழி பாடங்களுக்கு மட்டும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பாடங்களுக்கு, விடைத்தாள் திருத்தத்தின் போது, 'சென்டம்' மதிப்பெண் வந்தால், அதை, இரண்டாவது மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மொழி பாட விடைத்தாளில், 100 மதிப்பெண் வந்தால், அந்த மாணவரின் விடைத்தாளை, மதிப்பெண் கணக்கீட்டாளர், முதன்மை திருத்துனர் ஆகியோர் சரிபார்க்க வேண்டும். பின், அந்த விடைத்தாளை முகாம் அதிகாரியிடம் காட்டி, அதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும்.பின், தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுப்படி, மற்றொரு முதன்மை மதிப்பீட்டாளர் மற்றும் உதவி மதிப்பீட்டாளர் மூலம், மறு மதிப்பீடு மற்றும் ஆய்வு செய்ய வேண்டும். இதில், அந்த மதிப்பெண் மாறாவிட்டால் மட்டுமே, 'சென்டம்' வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறும்போது, 'இதுபோன்ற நிபந்தனைகள் மூலம், மாணவர்களுக்கு மொழி பாடத்தில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. அதேநேரம், சரியான விடைத்தாளுக்கு சரியான மதிப்பெண் தருவது தேவையான நடவடிக்கை' என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.