WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 18, 2016

இரண்டு நாட்களில் 40 ஆயிரம் பேர் இன்ஜி., படிக்க விண்ணப்பம்.


பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 570
கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலை மூலம் ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் விண்ணப்ப முறையை, அண்ணா பல்கலை அறிமுகம் செய்துள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஏப்ரல், 15ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே நாளில் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால், தொழில்நுட்ப கோளாறால் இணையதளம் முடங்கியது. இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, 16ம் தேதி முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. முதல் நாளில், 25 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இரண்டாம் நாளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். இ - சேவை மையங்களிலும், ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது. பதிவு குறித்த சந்தேகங்களுக்கு, அண்ணா பல்கலையின், 60க்கும் மேற்பட்ட உதவி மையங்கள் செயல்படுகின்றன. இதுகுறித்து, அண்ணா பல்கலை கவுன்சிலிங் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஆன்லைன் பதிவு இந்த ஆண்டு தான் துவங்கியுள்ளதால், எந்த சந்தேகமாக இருந்தாலும், பல்கலையின் தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் பிரிவை, 044 -2235 8041, 42, 43, 44 ஆகிய எண்களில், காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம். மேலும், tneaenq2016@annauniv.edu என்ற இ - மெயில் முகவரிக்கு, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பலாம். விண்ணப்ப கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, ரசீது வராவிட்டாலும் குழப்பம் தேவையில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.