WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 14, 2016

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: இணையத்தில் தேர்வுக் கூட நுழைவு சீட்டு.

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் தேர்வு ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்காக அரசுத் தேர்வுகளின் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில், தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பித்தோருக்கு தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது என்று தேர்வுத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.