விருதுநகர்: தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு இன்று முதல் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1ம் வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2016 - 17ம் கல்வியாண்டிற்கான இட ஒதுக்கீடு விவரங்களை பள்ளிகள் தங்களது பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். விண்ணப்பங்களை மே 3 முதல் 9ம் தேதி வரை விநியோகம் செய்ய வேண்டும்.பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் பெற்றோர்கள் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 9ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களுடன் வருமான சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்களை இணைத்து ஒப்படைக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.