WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 3, 2016

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, ஜூன் 16-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி, விண்ணப்பத்தைப் பெறலாம். முன்கூட்டியே மாணவர் சேர்க்கை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் சேர்க்கையும் நடத்திமுடிக்கப்பட்டது. அதுபோல நிகழாண்டும் மே 2-ஆம் தேதியே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி, சேர்க்கையையும் விரைவாக நடத்தி முடிக்க அரசு கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன. ஜூன் 16-ல் கல்லூரி திறப்பு: விண்ணப்ப விநியோகம் பிளஸ்-2 முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள் வரை விநியோகிக்கப்பட உள்ளன. பின்னர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அடுத்த 10 நாள்களில் தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்படும். ஜூன் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, 16-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.