WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 16, 2016

ஜூன் 17ல் பிளஸ்2 மறுகூட்டல் முடிவுகள்.

நடைபெற்ற மார்ச் 2016 பிளஸ்2 பொதுத்தேர்வில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு வருகிற ஜூன் 17ம் தேதி முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: 2016ல் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,33,682. இதில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 1,00,751. இவற்றில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் 3344, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்கள் 3422. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் மட்டுமே scan.tndge.in என்ற இணையதளத்தில் 17.06.2016 அன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படும். இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் வருகிற 20.06.2016 20.06.2016 அன்று காலை 10.00 மணி முதல் தாங்கள் படித்த பள்ளி/தேர்வு மையத் தலைமையாசியரிடம் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழினைப் பெற்று, மதிப்பெண் மாற்றத்தை அறியது கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.