WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 16, 2016

வகுப்பறையில் வரைபடம் கல்வித்துறை அறிவுறுத்தல்.

மாணவர்களின் பொது அறிவு மேம்பாட்டுக்காக, அரசு பள்ளி வகுப்பறைகளில், வரைபடம் வைக்க வேண்டும் என, கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. பாடத்திட்டத்தை தாண்டி, பொது அறிவு சார்ந்த விஷயங்களிலும், மாணவர்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காக, ஸ்மார்ட் வகுப்பறை, கற்பித்தலில் புதிய முறைகளை, பள்ளி கல்வித்துறை புகுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சமூக அறிவியல், புவியியல் பாடத்தை கற்பது ஒருபுறம் இருந்தாலும், அனைத்து வகுப்பறைகளிலும் வரைபடத்தை ஒட்டி வைக்க வேண்டும். நாடு, மாநிலம், நகரம், நாட்டின் வளம், அமைவிடம், நிலம், நீர்பரப்பு குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கூறுகையில், தேர்வுக்கு தயாராகும் போது மட்டுமே வரைபடத்தில் கவனம் செலுத்தும் மாணவர்கள், மற்ற நேரங்களில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலங்கள், உலக நாடுகள், பூகோளத்தன்மையை தெரிந்து கொள்ள உதவும் புதிய முயற்சியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது, என்றனர். ஒவ்வொரு கல்வியாண்டும் துவங்கும் போது, இவ்வாறான அறிவிப்புகளை கல்வித்துறை வெளியிடுவது வழக்கம். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்தனவா என்பது கண்காணிக்கப்படுவதில்லை. எனவே, அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை, பள்ளி வாரியாக மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.