மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.,18ல் நடக்கிறது. ஜூலை 18 வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோர் கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம்
வகுப்பு வரை கற்பிக்க முடியும். ஒன்று முதல் 5 ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிய முதல் தாளையும், ஆறு முதல் 8 ம் வகுப்புக்கு 2ம் தாளையும் எழுத வேண்டும். ஒருவரே இரு தாள்களையும் எழுதலாம். முதல்தாள் எழுத பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத பட்டப்படிப்புடன் 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்பு அல்லது பி.எட்., முடித்திருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.600, இரு தாள்களை
எழுத ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி.,- மாற்றுத்திறனாளிகள் ஒரு தாளுக்கு ரூ.300, இரு தாள்களுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். விபரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
செப்., 18 காலை 9:30 முதல் பகல் 12 மணி வரை 2 ம் தாள், பகல் 2 முதல் மாலை 4:30 மணி வரை முதல் தாளுக்கான தேர்வு நடக்கும். தகுதித் தேர்வுக்கு 'ஆன்லை-னில்' நேற்று முன்தினம் (ஜூன் 22) முதல் ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை ஜூலை 19 க்குள் செலுத்த வேண்டும். ஆக., 17ல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம், என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.