WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 24, 2016

அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பி.எப்., கணக்கு 'ஆன்லைனில்'.


தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின், சேமநல நிதி எனப்படும் பி.எப்., ஆண்டு கணக்கு விவரங்கள், 'ஆன்லைனில்' பதிவு செய்யப்படும்' என, தமிழக துணை கணக்காயர் அறிவித்து உள்ளார். இதுகுறித்து, அவர்
வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசில் பணியாற்றும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின், 2015 - 16ம் ஆண்டின், பி.எப்., கணக்கு விவரங்கள், மாநில கணக்காயரின், www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில், இம்மாத இறுதியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. ஊழியர்களின் கணக்கை பதிவிறக்கம் செய்வதோடு, அவற்றில் தவறுகள் இருந்தால், மாநில கணக்காயர் அலுவலகத்தில் தெரிவித்து திருத்திக் கொள்ளலாம். அதிகாரிகளுக்கு, 044 - 2432 4509, pagtngem@nic.in; ஊழியர்களுக்கு, 2432 4547, aggpf@tn.nic.in என்ற தொலைபேசி எண் மற்றும் இணையதள முகவரிகள், திருத்தங்களை தெரிவிக்க ஒதுக்கப்பட்டு உள்ளது. 'துணை மாநில கணக்காயர் (நிதி I, II), மாநில கணக்காயர் அலுவலகம், 361, அண்ணா சாலை, சென்னை - 600 018' என்ற முகவரிக்கு, தபால் மூலமும் குறைகளை தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.