WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 24, 2016

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) ஜூலை 18-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு “சி-டெட்” எனப் படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி, செப் டம்பர்) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான சி-டெட் தகுதித் தேர்வு செப்டம்பர் 18-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.  மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய திபெத்திய பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு “சி.டி.இ.டி” எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரண்டு தாள்கள் கொண்ட இந்த தேர்வில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-1 இல் மட்டும் பங்கேற்றால் போதுமானது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-2 இல் பங்கேற்றால் போதுமானது. இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களும் எழுத வேண்டும். செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: www.ctet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வறை அனுமதிச் சீட்டை ஆகஸ்ட் 17-இல் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.  விண்ணப்பக் கட்டணம்: ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600-ம் இரண்டையும் எழுதுபவர்களுக்கு ரூ.1000-ம், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 300-ம், இரண்டு தாள்களையும் எழுத ரூ.500-ம் செலுத்த வேண்டும். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய www.ctet.nic.in இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.