சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறித்து ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புரட்சிகர மாணவர் இயக்கம்
தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அரசாணைப்படி அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி புரட்சிகர மாணவர் இயக்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு செய்ய ஏற்கனவே உத்தரவிட்டப்பட்டது. ஆனால் தமிழக அரசு நீதிமன்றத்தில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து ஆய்வறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்றம் பள்ளிக் கல்வித்துறையை எச்சரித்துள்ளது. பின்னர் வழக்குவிசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்,
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.