மின் வாரிய வேலைக்காக, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
* மின் வாரியத்தில், 200தட்டச்சர்; 50
உதவி வரைவாளர், 25 இளநிலை தணிக்கையாளர் பணியிடங்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு வரும், 19ல், எழுத்து தேர்வு
நடக்கிறது.
* இளநிலை உதவியாளர் - கணக்கு, சுருக்கெழுத்தர், களப்பணி உதவியாளர், இளநிலை உதவியாளர் நிர்வாகம், தொழில்நுட்ப உதவியாளர் - எலக்ட்ரிக்கல், தொழில்நுட்ப உதவியாளர் - மெக்கானிக்கல் மற்றும், 'லேப் டெஸ்டர்' பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஆக., 27, 28ம் தேதிகளில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
* மேலே குறிப்பிட்ட தேர்வுகளை, அண்ணா பல்கலை நேரடியாக நடத்துகிறது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு, தகுதி அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும். பொது மக்கள், இடைத்தரகர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில்கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.