Monday, June 20, 2016
உதவி பேராசிரியர் தேர்வு முடிவு அண்ணா பல்கலை இழுத்தடிப்பு.
அண்ணா பல்கலை உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு, நான்கு மாதங்களாக வெளியிடப்படாததால் தேர்வர்கள் தவிப்பில் உள்ளனர்.இப்பல்கலை சார்பில் மெக்கானிக்கல், மின்னியல், மின்தொடர்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கட்டடவியல் துறைகளில் 25 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜன., 24ல் நடந்தது. 'அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது; ஆனால் வெளியிடப்படவில்லை. 'தேர்வு முடிவு பின்னர் அறிவிக்கப்படும்' பல்கலை நிர்வாகம் தெரிவித்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'அண்ணா பல்கலை உடனடி தேர்வின் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஊழல் மற்றும் குளறுபடி ஏற்பட்டுள்ளது' என கண்டனம் தெரிவித்தார். இதன் பிறகும் பல்கலை மவுனம் சாதிக்கிறது.'பணி கிடைக்குமா, கிடைக்காதா?' என தேர்வர்கள் தவிப்பில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.