WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 20, 2016

இன்ஜினியரிங் கவுன்சிலிங் 'ரேண்டம்' எண் இன்று வெளியீடு.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, 1.35 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இரண்டு வாரங்களாக, விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்துள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான, 'ரேண்டம் எண்' என்ற சம வாய்ப்பு எண்ணை, இன்று காலை, 9:30 மணிக்கு அண்ணா பல்கலை வெளியிடுகிறது. ரேண்டம் என் ஏன்?:ரேண்டம் எண், மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் இல்லாத எண்ணாக இருந்தாலும், தர வரிசையில், ஒரே, 'கட் ஆப்' மதிப்பெண் வரும் மாணவர்களில், முன்னுரிமை மாணவரை தேர்வு செய்ய பயன்படுகிறது. ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இருந்தால், யாருக்கு தர வரிசையில் முன்னுரிமை வழங்குவது என்ற குழப்பம் ஏற்படும். இந்த குழப்பத்தை தீர்க்க, அண்ணா பல்கலையின் அதிகாரிகள், ரேண்டம் எண்ணை பயன்படுத்துகின்றனர். முதலில் ஒரே, 'கட் ஆப்' கொண்ட மாணவர்களின், கணித மதிப்பெண்ணில் யார் அதிகம் என, பார்த்து முன்னுரிமை தரப்படும். அதிலும், ஒரே மாதிரி இருந்தால், இயற்பியல் மதிப்பெண், அடுத்து, நான்காவது பாடத்தின் மதிப்பெண் பார்க்கப்படும். அதிலும் ஒரே மதிப்பெண் என்றால், பிறந்த தேதியில் யார் மூத்தவர் என்று பார்க்கப்படும். அதிலும் சமமாக இருந்தால், 'ரேண்டம்' எண்ணில், எந்த விண்ணப்பதாரரின் எண்ணின் கூட்டுத் தொகை அதிகமாக உள்ளதோ, அந்த மாணவருக்கு முன்னுரிமை தரப்படும். இதையடுத்து, மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண்ணின் படி, தர வரிசை பட்டியல், வரும், 22ல் வெளியாகும்; 24ல் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், 25ல், மாற்றுத் திறனாளிகளுக்கும் கவுன்சிலிங் நடக்கும். மற்ற மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங், வரும், 27ல் துவங்கும். பொது கவுன்சிலிங் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது, தர வரிசை பட்டியல் வெளியீட்டு நாளில் அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.