WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 21, 2016

ஐ.டி.ஐ., சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு.


தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், 85 அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 22 அரசு உதவி பெறும் ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 461 தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 22 அடிப்படை பயிற்சி மையங்கள்
செயல்படுகின்றன. இவற்றில், ஒவ்வொரு ஆண்டும், 'பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன், ஒயர்மேன், மோட்டார் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன் சிவில், வெல்டர், மெக்கானிக் டீசல், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், டெய்லர்' ஆகிய தொழிற்பிரிவுகளில், 30 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது. இவற்றில் சேர, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, நேற்றுடன் முடிந்ததை, ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள், தமிழகத்தில் எந்த ஐ.டி.ஐ., நிறுவனத்திலும் சேரலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.