மாணவர்களுக்கு வங்கிகள் நெருக்கடி கொடுப்பதால் கல்விக் கடனை அரசே ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால், கல்விக் கடன் வாங்கி கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் நெருக்கடி என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. கல்விக் கடன் பெற்று உயர்கல்வி கற்றவர்கள் வேலை கிடைக்காமலும், வாங்கிய கடனை கட்ட முடியாமலும் தவிக்கின்றனர். அவர்களை கைதூக்கி விட வேண்டிய அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
ஒரு காலத்தில் வேலைக்கு உத்தரவாதமுள்ள கல்வி என்று போற்றப்பட்ட பொறியியல் படிப்பு, இப்போது அதன் தரத்தை இழந்து நிற்கிறது. பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. இதற்கு காரணம் தகுதியற்ற கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தரமற்ற பொறியியல் படிப்பு தான். பெரும்பாலும் ஏட்டுக் கல்வியை மட்டுமே படிக்கும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியோ, தொழில் பயிற்சியோ வழங்கப்படாததால் அவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் கிடைப்பதில்லை. அதன் விளைவு தமிழகத்தில் 70 சதவீத பொறியியல் பட்டதாரிகள் வேலையின்றி தவிக்கின்றனர். இந்தியாவில் வேலையில்லாத பொறியியல் பட்டதாரிகள் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் தான் என மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.