WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 12, 2016

டான்செட் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்.


முதுநிலை பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு,அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. 2016 ஆண்டுக்கான இந்தத் தேர்வில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான தகுதித் தேர்வு சனிக்கிழமையும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு இன்று நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 34 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் 10 மையங்களில் நடந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.